Tamil

இருதுருவ அரசியலை எதிர்காலத்தில் பாஜக.,வால் எதிர்கொண்டு வெற்றி பெற முடியுமா ?

Written by : Pheba Mathew

ஜெயலலிதா பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் பா.ஜனதாவின் தலைவர்களுள் ஒருவரான வெங்கையா நாயுடு கலந்து கொண்டிருக்கும் போது, தமிழக பாரதீய ஜனதா கட்சியினர் சட்டமன்ற தேர்தலில் தங்கள் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

134 இடங்களில் போட்டியிட்ட, பாரதீய ஜனதா கட்சியால் ஒரு இடம் கூட வெல்ல முடியவில்லை. இருப்பினும் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் பெற்ற 2.2 சதவீத வாக்குகளிலிருந்து, அதன் வாக்கு சதவீதம் 2.8  ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 100 இடங்களை தனது கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு, பாரதீய ஜனதா கட்சி பிரித்து கொடுத்தது. அவர்களோ சொல்லும்படியான வாக்குகளை பெறவில்லை. இப்படியிருக்க, பாரதீய ஜனதா கட்சிக்கு என்ன தவறு நேர்ந்துவிட்டது ? இனிமேலும் முன்னோக்கி செல்வதற்கான வழிகள் தான் என்ன ? என்பதையே அவர்கள் ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

திங்கள்கிழமையன்று மதுரையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் பொருத்தமான கூட்டணி அமையாதது கட்சிக்கு பின்னடைவாக இருந்தது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஒப்பு கொண்டுள்ளார். 2014 இல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகள், இந்த முறை அந்த கூட்டணியில் இல்லாமலிருந்தனர். அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளர் ஆக்கும் திட்டத்துடன், பாமக தனித்து களமிறக்கியதன் மூலமும், நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் தேமுதிகவை இழுக்க பலகட்ட முயற்சிகள் செய்தும் பயனளிக்காமல் போனதும், 2014 தேர்தல் முடிந்தவுடனேயே, மதிமுகவின் வைகோ கூட்டணியை விட்டு வெளியேறியதும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சிகள் இல்லாமல் போக காரணமாயின.

மேலும், திமுக மற்றும் அதிமுகவை ஒப்பிடும் அளவிற்கு பாரதீய ஜனதா இல்லை என்பதை வெங்கையா நாயுடு ஒப்பு கொண்டுள்ளார். “ இரு திராவிட கட்சிகளுமே, தங்கள் வளங்களை கொண்டும், தங்கள் வலையமைப்பை கொண்டும் தீவிரமாகவே போட்டியிட்டனர்.” என கூறுகிறார் அவர். பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடுக்கு அளித்த பேட்டியில், தமிழிசை சவுந்திராஜனை தொடர்ந்து மாநிலத் தலைவராக வைத்திருப்பது, கட்சி செய்த தவறுகளில் ஒன்று எனவும், கட்சிக்கு வலுமையான ஒரு தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார்.

தேசிய தலைவர் அமித்ஷாவின் சில உத்திகளும் தமிழகத்தில் எடுபடவில்லை என கூறுகிறார் அந்த மூத்த தலைவர்.” திராவிட கட்சிகள் வலுவாக இருக்கும் தமிழகத்தில், ஜாதியை அடிப்படையாக கொண்டு வாக்குகளை பிரித்து வெற்றி பெறலாம் என்ற சோதனை வெற்றி பெறவில்லை” என டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் அவர் கூறியுள்ளார்.

வரும் மாதங்களில் கட்சியை வலுப்படுத்தவும், தனது தேர்தல் உத்தியை மாற்றி அமைக்கவும் பாரதீய ஜனதா தயாராகி வரும் சூழலில், மூத்த பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன் தமிழகத்தில் பாரதீய ஜனதாவின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும் என்கிறார். “ தமிழ்நாடு வித்தியாசமான நிலப்பரப்பு. பாரதீய ஜனதாவின் கொள்கைகள் இங்கு ஒத்துவராது” என கூறும் அவர், அக்கட்சியின் கடந்த கால செயல்பாடுகளை சுட்டிகாட்டுகிறார். 2001 இல் திமுகவுடன் கூட்டு சேர்ந்த பாரதீய ஜனதா 21 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதனால் ஒரு இடங்களிலும் வெற்றி பெற முடியவில்லை.

“பாரதீய ஜனதாவின் இந்துத்வா அடையாளத்தால், மாநில கட்சிகளும் அதனுடன் அடையாளப்படுத்தப்பட விரும்பவில்லை. திராவிட இயக்கங்களின் வலு அதிகம் உள்ள தமிழகத்தில், பாரதீய ஜனதாவுடன் நெருக்கமாக இருக்கும் எந்த கட்சிக்கும், அங்கீகாரம் கிடைப்பதில்லை.” என்கிறார் சென்னை பல்கலைகழக பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

திராவிட கொள்கைகள் உள்ள தமிழகத்தில், பாரதீய ஜனதாவிற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாக இருப்பதாகவே கோபாலன் நம்புகிறார்.”  மோடி ஆச்சரியப்படத்தக்க வகையில் பிரபலமாகவோ அல்லது திராவிட கட்சிகளுடன் கைகோர்த்தாலோ அல்லாது, அதற்கான வாய்ப்புகளே இல்லை” என்கிறார் அவர்.

கேரளம் மற்றும் கர்நாடகத்தை விட தமிழகம் பாரதீய ஜனதாக்கட்சிக்கு கடும் சவாலாகவே இருக்கும்.திராவிட கட்சிகள் இங்கு, வலுவாக மோதிக்கொண்டிருக்கையில், தேசிய கட்சிகளுக்கு மிகச்சிறிய அரசியல் களமே மோதுவதற்கு உள்ளது என கூறுகிறார்.

மணிவண்ணன் போன்ற அரசியல் பார்வையாளர்களின் கருத்துப்படி பார்த்தால், பாரதீய ஜனதா கட்சியினர், தமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரொம்பவே ஆய்வு செய்ய வேண்டி இருக்கும் போல் தெரிகிறது. 

From ‘strong support’ to ‘let’s debate it’: The shifting stance of RSS on reservations

Political manifestos ignore the labour class

Was Chamkila the voice of Dalits and the working class? Movie vs reality

7 years after TN teen was raped and dumped in a well, only one convicted

Marathwada: In Modi govt’s farm income success stories, ‘fake’ pics and ‘invisible’ women